ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? - சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!
Sep 28, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 27, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு சுங்க கட்டணம் விதிப்பது தொடர்பாக சீனா மற்றும் வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. ஈரானின் இந்த முடிவு மத்திய கிழக்கில் அமைதிக்கு வழிவகுக்குமா? அல்லது மீண்டும் பதற்றத்துக்கு வித்திடுமா? என்பதை விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்.

ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாக சர்வதேச அளவில் 30 சதவீத கச்சா எண்ணெய் விநியோகம் நடைபெறுகிறது. தினந்தோறும் 17 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹோர்முஸ் நீரிணையில், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி சுங்கக் கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் ஆண்டுக்கு 40 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் ஈரானுக்கு வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஏற்கெனவே துருக்கி கட்டுப்பாட்டில் உள்ள டார்டெனல்ஸ் ((Dardanelles)) நீரிணையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை போல, ஹோர்முஸ் நீரிணையிலும் கட்டணம் வசூலிக்க இருப்பதாக ஈரான் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளது.

அந்த வகையில், ஹோர்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டண வசூலிக்கும் முறை அமலுக்கு வந்தால், அதன் மீதான ஈரானின் கட்டுப்பாடு இன்னும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இதுதொடர்பாக வளைகுடா நாடுகளுடனும், சீனா உடனும் ஈரான் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும், இந்த ஒப்பந்தத்தில் வளைகுடா நாடுகளும் அங்கம் வகித்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக கிடைக்கும் வருவாயைப் பகிர்ந்துகொள்வதில் ஈரான் தயாராக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே ஓமனில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகெர் காலிபாஃப் ((Mohammad Bagher Ghalibaf)), “ஹோர்முஸ் நீரிணை நிர்வாகம் இதற்கு முன் இருந்த நிலைமைக்கு மீண்டும் திரும்பாது” என கூறியதில் இருந்து, அங்கு சுங்க கட்டணம் வசூலிப்பதில் ஈரான் உறுதியாக இருப்பதை உணரலாம்.

அமெரிக்கா- ஈரான் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் காரணமாக ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது. போருக்கு முன் தினமும் 130 சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த சூழலில், தற்போது 70 கப்பல்கள் கடந்து வருகின்றன. ஹோர்முஸ் நீரிணை வழியாக இதுவரை சுமார் 30 கப்பல்கள் இந்தியா வந்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை வரும் நாள்களில் அதிகரித்து, ஹோர்முஸ் நீரிணை இயல்பு நிலையை விரைவில் எட்டும் என்பதில் சந்தேகமில்லை.

அதேவேளையில், அங்கு ஈரான் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஈரானின் இந்த முடிவு அபாயகரமானது என்றும், இதே பாணியில் பிற நாடுகளும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள நீரிணைகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க இந்த முடிவு வழிவகுத்துவிடும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடல் வழித்தடத்தில் சுங்கக் கட்டணம் விதிக்க எந்தவொரு நாட்டுக்கும் தார்மீக உரிமை இல்லை என கூறிய மார்கோ ரூபியோ, சுங்கக் கட்டண ஒப்பந்தத்தை ஒருபோதும் ஏற்க இயலாது என திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தின்படி ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறந்துவிட்டது. இருப்பினும், அதில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஒப்பந்தத்தில் ஏதும் நிபந்தனை இல்லாத பட்சத்தில், இந்த விவகாரம் சுமுகமான முறையில் தீர்த்து வைக்கப்படுமா? அல்லது மீண்டும் ஒரு போருக்கு வித்திடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

Tags: us iran war liveiran war updateiran war latestisrael us iran waramerica vs iran wariran warStrait of HormuzIran-US wariran war news
Share
Tweet
SendShare
Previous Post

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

Next Post

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

Related News

வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies