கொள்முதல் விலை உயர்ந்ததால் உணவகங்களிலும் முட்டை விலை உயர வாய்ப்பு உள்ளதாகத் தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தினரின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில செயலாளர் சீனிவாசன், உணவக தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிடும் வகையில் மாநில அரசு, உணவக பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
















