2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த இந்தியாவை சேர்ந்த நபர், துபாயில் இன்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தலைநகர் டெல்லியில் கடந்த 82 கிலோ எடையிலான கோகைனை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். விசாரணையில் பவன் தாகூர் என்பவர், கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது.
அவர் துபாயில் உள்ளதை அடுத்து ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் உதவியை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நாடியது.
இந்நிலையில், துபாயில் பதுங்கி இருந்த பவன் தாகூரை, போலீசார் கைது செய்தனர். விரைவில் அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் எனக் கூறப்படுகிறது.
















