வாரிசுகள் பெயரில் வழங்கப்படும் கூட்டு பட்டா நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டுவர உள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி வாரிசுகள் பெயரில் மொத்தமாக வழங்கப்படும் கூட்டு பட்டாக்களில், அவரவருக்கான பாகத்தை தெளிவாகக் குறிப்பிடுவதற்கான மாற்றங்களை விரைவில் அறிமுகப்படுத்த, வருவாய் துறை தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் வாரிசுகள் எண்ணிக்கை அடிப்படையில், சொத்துப் பாகம் என்ன என்ற விபரங்களுடன் கூட்டு பட்டா வழங்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் அரசின் அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் வருவாய்த்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















