மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள சிவில் மருத்துவமனையில் நோயாளிகள் அறைக்குள் பாம்பு ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தானேவின் மேற்கு பகுதியில் உத்சல் சாலைக்கு அருகே உள்ள சிவில் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அந்த வார்டில் பாம்பு ஒன்று புகுந்திருந்ததால் நோயாளிகள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
அப்போது அங்கிருந்த இளைஞர்கள் ஒருவர், மருத்துவ உபகரணங்கள் வைத்திருந்த மேஜைக்கு அடியில் புகுந்த பாம்பை இரும்பு கம்பியைக் கொண்டு வெளியே எடுத்தார்.
பாம்பை கண்ட நோயாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார். இதையடுத்து நீண்ட நேரம் போராடி இளைஞர்கள் சேர்ந்து பாம்பை பத்திரமாகப் பிடித்தனர். இதனால் நோயாளிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
















