பாதிக்கப்பட்டவருக்கு நீதி மறுக்கப்படும்போது, அரசியலமைப்பின் மீதான நம்பிக்கையை அவர் இழந்துவிடுவதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் மாபெரும் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், சட்டக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் அனைவரும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று அரசியலமைப்பின் முக்கியத்துவம் பற்றி விளக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
நீதி மறுக்கப்பட்டதே சிறைச்சாலைகள் அனைத்தும் ஏழைகளால் நிரம்பி உள்ளதற்கு காரணம் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாதிக்கப்பட்டவருக்கு நீதி மறுக்கப்படும்போது, அரசியலமைப்பின் மீதான நம்பிக்கையை அவர் இழந்து விடுவதாகத் தெரிவித்தார்.
















