தினசரி சந்தையில் வடியாத மழைநீர் : கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்!
Sep 12, 2026, 10:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தினசரி சந்தையில் வடியாத மழைநீர் : கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 04:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் மாவட்டம் தலைவாசலில் பெய்த மழை காரணமாகத் தினசரி காய்கறி சந்தை சேறும் சகதியமாகக் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி சந்தையில் இருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதுமட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் இங்கிருந்து காய்கறிகள் விற்பனை எடுத்துச் செல்லப்படுகின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்தைக்குத் தலைவாசல் மட்டுமின்றி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், ஆறகளூர் என 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். எப்படி பார்த்தாலும் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் தினந்தோறும் வந்து செல்லும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் தலைவாசல் காய்கறி சந்தையின் அடிப்படை வசதிகள் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை.

ஒட்டுமொத்தமாக நான்கு கழிப்பிடங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவை அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டும், பராமரிப்பின்றி காணப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. அதுவும் மழை காலம் ஆரம்பித்து விட்டால் போதும்…. மொத்த மார்க்கெட்டுமே சேறும் சகதியுமான மாறி அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. இதனால், விளைபொருட்களை கொண்டு வரும் விவசாயிகளும், விற்பனைக்கு வரும் வியாபாரிகளும் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதும், இருசக்கர வாகனங்களில் தடுமாறி கீழே விழுவதும் தொடர் கதையாக இருக்கிறது. காய்கறிகள் விற்பனை செய்யும் இடத்திற்கு அருகிலேயே மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள், வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டின் தலையாய சந்தைகளில் ஒன்றாக இருக்கும் தலைவாசல் காய்கறி சந்தையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, விற்பனைக்கான சூழ்நிலையை மேம்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags: tn rain newsவடியாத மழைநீர்floodflood newsRainwater that does not drain into the daily market: Traders in tearsகண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்!
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தான் அணுசக்தி நாயகனின் தகிடுதத்த வேலைகள் : புட்டு புட்டு வைத்த அமெரிக்க முன்னாள் உளவு அதிகாரி!

Next Post

நீதி என்பது அனைவருக்குமானதாக மாற வேண்டும் – ஆளுநர் ரவி

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies