சென்னை எண்ணூரில் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை, S.I.R படிவத்தின் உதவியால் 21 ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்தனர்.
எண்ணூர் மூன்றாவது தெரு இந்திரா நகரில் ராஜேந்திரன் என்ற ரபீக் வசித்து வந்தார். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தாஜுதீன் என்பவரை கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
சுமார் 21 ஆண்டுகளாகத் தலைமுறைவாக இருந்த ராஜேந்திரனை கைது செய்ய வேண்டும் என ஆவடி மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைத்து ராஜேந்திரனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ராஜேந்திரன் கடலூர் மாவட்டத்தில் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற போலீசார் எஸ்.ஐ.ஆர் படிவத்தை வைத்துத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் மட்டும் 10 மேற்பட்டோர் இருந்த நிலையில் அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து பெங்களூருவில் வேலை பார்த்து வந்த குற்றவாளி ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். எஸ்ஐஆர் படிவத்தை வைத்து 21 ஆண்டுகள் கழித்து குற்றவாளியை கைது செய்த போலீசார், ஆவடி காவல் ஆணையர் வெகுவாகப் பாராட்டினார்.
















