ஹாங்காங் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
ஹாங்காங்கில் உள்ள Wang Fuk என்ற வளாகப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 2 ஆயிரம் வீடுகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 44 பேர் உயிரிழந்த நிலையில் 250க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் சிலரும் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
















