அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைய உள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவியது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்திற்கு செங்கோட்டையன் வருகை தந்தார். பின்னர் சுமார் இரண்டு மணி நேரமாக தவெக தலைவர் விஜய்யுடன், அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது தவெகவின் முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
தொடர்ந்து இன்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















