கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் கோயில் தெப்பக்குள சுற்றுச்சுவர் இடிந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வலியுறுத்திப் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுசீந்திரத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது தாணுமாலையன் கோயில் தெப்பக்குளத்தில் தூர்வாரும் பணியின்போது அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதால் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாகப் பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
















