புதுச்சேரியில் பிரபல நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயார் செய்த தொழிற்சாலைக்கு சிபிசிஐடி போலீசார் சீல்வைத்தனர்.
புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தினர். போலி மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்து வந்த ரானா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் ராஜா என்பவர் போலி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அங்கு சென்ற சிபிஐசிடி போலீசார், தொழிற்சாலையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான போலி மருந்துகள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், தொழிற்சாலை மற்றும் குடோன்களுக்கு சீல் வைத்த போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலி மருந்து விற்பனை வழக்கில் தலைமறைவாக உள்ள 10க்கும் மேற்பட்டோரை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
















