கோவை மாவட்டம் சூலூரில் அரசுப் பள்ளி ஆசிரியை தாக்கியதில் 2ம் வகுப்பு மாணவி படுகாயமடைந்தார்.
பிரம்பால் அடித்ததில் கையில் பலத்த காயம் ஏற்பட்ட மாணவிக்கு அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாகப் பெற்றோர் அளித்த புகாரில், ஆசிரியை பெரியநாயகி மீது போலீசார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர்.
இதனிடையே காயமடைந்த சிறுமிக்குப் பிளாஸ்டிக் அறுவகை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அரசு உதவ வேண்டுமெனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















