மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க 8-வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியாக, கடந்த 19ம் தேதி மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா பயணிகள் குளிக்க 8-வது நாளாகத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
















