கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்று வேல் பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரி மனுவுக்குக் காவல்துறை பதிலளிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்று வேல் பூஜை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வேல் பூஜை நடத்துவதற்கு இந்து அறநிலையத்துறை அனுமதி வழங்க மறுப்பதாக வாதிடப்பட்டது.
இதனை தொடர்ந்து வாதிட்ட அறநிலையத்துறை தரப்பு, ஊர்வலமாக வந்து வேல்பூஜை நடத்துவதால் மற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இடையூறு ஏற்படுவதால் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு தொடர்பாகக் காவல்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
















