சிறுபான்மையினரை மோசமாக நடத்தும் வரலாற்றைக் கொண்ட பாகிஸ்தான், மற்ற நாடுகளுக்குப் பாடம் எடுக்க எந்த உரிமையும் இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அளித்த பேட்டியில், பாசாங்குத்தனமான உபதேசங்களை வழங்குவதற்கு பதில், பாகிஸ்தான் தனது நாட்டில் நடக்கும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்துவது நல்லது என்று குறிப்பிட்டார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி நிறைவையொட்டி பிரதமர் மோடி காவி நிறக் கொடியை ஏற்றிய நிலையில், அதுகுறித்து பாகிஸ்தான் விமர்சித்திருந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் தெரிவித்த கருத்துகளை நிராகரிப்பதாகவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
















