மதுரை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு உள்ள பழுதடைந்த மின்மாற்றியை மாற்றியமைக்க வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு உள்ள மின்மாற்றி பழுதடைந்து காணப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
போராட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனரில் தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் படம் இடம்பெற்றிருந்தது பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்த பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அய்யப்பன், ஒபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒரே அணியில் பயணித்தபோது போஸ்டர் அடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
















