கவுன்சிலர் கூட ஆகாத தவெக தலைவர் விஜய், உலகத்தையே ஆள முடியுமா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக நெல்லையில் அவர் அளித்த பேட்டியில்,
அதிமுக எப்போதும் தனக்கென்று வாக்கு வங்கியை கொண்டுள்ளது என்றும் திமுக வீழ்ச்சியான சூழ்நிலையில் உள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்றும் விஜய் இப்போது தான் கட்சி ஆரம்பித்துள்ளார், அவர் கவுன்சிலர் கூட ஆகவில்லை, கவுன்சிலர் கூட ஆகாத தவெக தலைவர் விஜய், உலகத்தையே ஆள முடியுமா? என்று கேள்வி எழுப்பிய அவர் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அணியே ஆட்சி அமைக்கும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
















