கரூர் வெண்ணெய்மலை கோயில் இடம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் வீடு மற்றும் கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் வெண்ணெய்மலை பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குச் சீல் வைக்கும் நடவடிக்கையில் அறநிலையத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வெண்ணைமலை கடை வீதியில் அமைந்துள்ள வீடு மற்றும் 30-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
















