சமூகநீதி பற்றிக் கூறி வரும் திமுக அரசு, தூய்மை பணியாளர்களின் மீது அக்கறையற்று உள்ளதாக உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணி நீக்கத்திற்கு எதிராகப் பெண் தூய்மை பணியாளர்கள் 4 பேர் அம்பத்தூரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஈடுபட்டு வருவதாகவும் ஆனால் இப்போராட்டத்தை அரசு கண்டு கொள்ளவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.
















