சென்னை யானை கவுனியில் நகைப்பட்டறையில் கொள்ளையடித்து சென்ற வழக்கில் 3 பேரை தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர்.
சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் யானைகவுனி பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். அங்கு வந்த இரண்டு பேர் ஜெகதீஷை தாக்கி 750 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ராஜஸ்தானில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், வழக்கில் தொடர்புடைய நகைக்கடை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.
















