நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மூதாட்டியை தாக்கி கொன்ற புலியை பிடிக்க மூன்று இடங்களில் கூண்டு அமைத்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாவனல்லா பகுதியில் கடந்த திங்கள் கிழமை நாகியம்மாள் என்ற மூதாட்டி புலி தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வரும் நிலையில், பசு மாடு ஒன்றையும் அந்த புலி தாக்கியது.
இந்நிலையில் T 37 என்று பெயரிடப்பட்ட அந்த புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் 40 பேர் கொண்ட வனத்துறையினர் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மூன்று இடங்களில் கூண்டு வைத்து புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
















