திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
கோவையில் இருந்து சேலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார், முறையாகச் சிக்னல் காட்டாமல் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு கார் ஓட்டுநர், சம்மந்தப்பட்ட காரை துரத்திச் சென்று செங்கப்பள்ளி அருகே வழிமறித்துள்ளார்.
இதனால் 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகன ஓட்டிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பிய நிலையில், கார் ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
















