நாமக்கல் எஸ்.பி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் தற்கொலை செய்ய வந்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டவர் நகரை சேர்ந்த சிவசாமி-சாந்தி தம்பதியினர் நாமக்கல்லில் உள்ள எஸ்.பி அலுவலகத்திற்கு வந்த நிலையில், காரில் மறைத்து வைத்திருந்த 5 லிட்டர் பெட்ரோல் கேனை எடுத்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
அப்போது, அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தியதால், தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், விவசாய நிலத்திற்கு செல்லும் வழித்தடம் தொடர்பாகப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் 13 லட்சம் ரூபாய் பணம் வாங்கியவர்கள், தங்களை ஏமாற்றியதகாவும், புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.
















