ஆந்திர மாநிலம் நெல்லூரில் கஞ்சா மற்றும் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நெல்லூர் ஊரகப் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது 23 கிலோ கஞ்சா போதைப்பொருள் மற்றம் 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் ஒடிசாவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















