தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வருடாந்திர உதவித்தொகை வழங்க வலியுறுத்தி, இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் விழுப்புரத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
அண்டை மாநிலமான ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வருடாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதேபோல் தமிழக அரசும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் 15 ஆயிரம் ரூபாய் வருடாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்தப் படிவத்தை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க ஆட்டோ ஓட்டுநர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
















