டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதான தீவிரவாதி முசம்மில், அல்-பலா பல்கலைக்கழகம் அருகேயுள்ள 2 இடங்களில் பல நாட்களாகப் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
டெல்லி கார் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான முஸம்மிலிடம் NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பரிதாபாத்தில் உள்ள பதேப்பூர் தாகா, தௌஜ் ஆகிய இரண்டு பகுதிகளில் வாடகை வீட்டில் அவர் வசித்ததும், பழக்கடை தொழில் செய்யப்போவதாகக் கூறி வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, முசம்மிலுக்கு வீடு கொடுத்த ஜும்மா கான் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்றே மாதத்தில் முசம்மில் வாடகை வீட்டில் இருந்து காலி செய்ததாகத் தெரிவித்தார்.
இதனிடையே, பயங்கரவாதி முசம்மில் தங்கிருந்த மற்றொரு வீட்டில் வெடி பொருட்களை அவர் பதுக்கி வைத்திருந்ததும், பின்னர் அவற்றை வேறு பகுதிக்கு மாற்றியதும் தெரியவந்துள்ளது.
இதன்மூலம், வாடகை வீட்டில் வசித்துப் பல மாதங்களாகத் திட்டமிட்டு குண்டுவெடிப்பை நிகழ்த்தியது அம்பலமாகியுள்ளது.
















