சபரிமலை ஐயப்பன் கோயிலில் 9 நாட்களில் 9 பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது.
இதையடுத்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சபரிமலை யாத்திரை மேற்கொண்ட கோவையைச் சேர்ந்த முரளி என்ற பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஏற்கனவே 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
















