வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தேசிய பாதுகாப்பு படை வீராங்கனை சாரா பெக்ஸ்ட்ரோம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெள்ளை மாளிகை அருகே நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் அந்நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ராணுவ வீராங்கனை சாரா பெக்ஸ்ட்ராம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுபற்றிப் பேசிய அவர், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு வீரர், உயிருக்குப் போராடி வருவதாகத் தெரிவித்தார்.
















