தாய்லாந்தின் ராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிங்க் வண்ணம் பூசப்பட்ட யானைகளின் ஊர்வலம் நடைபெற்றது.
தாய்லாந்து ராணி சிரிகிட் உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த அக்டோபர் 24ம் தேதி 93 வயதில் காலமானார்.
இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாங்காக்கில் உள்ள கிராண்ட் பேலஸ் வளாகத்தில் யானைகள் ஊர்வலம் நடைபெற்றது.
ராணிக்கு பிங்க் நிறம் பிடிக்கும் என்பதால் 11 யானைகளுக்குப் பிங்க் வண்ணம் பூசப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.
ராணியின் உருவப்படத்தை சுமந்து சென்ற யானைகள் முன்பு பொதுமக்கள் விழுந்து வணங்கி அஞ்சலி செலுத்தினர்.
















