இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டுக்கான ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 8 புள்ளி 2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், உற்பத்தி துறையில் உற்பத்தி அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி குறைப்பு, நுகர்வு அதிகரிப்பு உள்பட பல்வேறு காரணிகளால் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 8 புள்ளி 2 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 6 காலாண்டுகளில் அதிகபட்ச வளர்ச்சியாகும். அரசின் பொருளாதார சீரமைப்பு மற்றும் வளர்ச்சி கொள்கைகளுக்கான விளைவே ஜூலை – செப்டம்பர் காலாண்டு ஜிடிபி வளர்ச்சியின் முடிவு என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
















