மதுரையில் நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியின் 4 ஆவது லீக் போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஜூனியர் அணிகளுக்கான 14-வது சீசன் உலக கோப்பை ஹாக்கி போட்டி மதுரையில் தொடங்கியது.
முதல் லீக் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவும், இரண்டாவது லீக் போட்டியில் கனடாவை வீழ்த்தில் அயர்லாந்தும், மூன்றாவது லீக் போட்டியில் எகிப்து அணியை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெற்றது.
இதனைதொடர்ந்து நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் நமிபியா அணியை 11 கோல் வித்தியாசத்தில் பெல்ஜியம் அணி வீழ்த்தியது. இதில் சிறப்பாக விளையாடி 3 கோல்களை அடித்த பெல்ஜியம் அணி வீரர் LABOUCHERE HUGO ஆட்ட நாயகன் விருதை வென்றார்,
















