ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்த சபாநாயகருக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சென்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மணக்குள விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருப்பதாக குற்றஞ்சாட்டினார். நடுநிலையாக இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநரை பற்றி அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், திமுக கூட்டணி பலவீனம் அடைந்து விட்டதாகவும் விமர்சித்தார்.
















