கொடைக்கானலில் அதிகரித்துவரும் செந்நாய் கூட்டங்கள், வளர்ப்பு பிராணிகளை தாக்குவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கொடைக்கானல் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டெருமைகள், செந்நாய் போன்ற விலங்குகள், விவசாய பகுதிகளை சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில், செண்பகனூர் பகுதியில் உலா வரும் செந்நாய் கூட்டங்கள், வளர்ப்பு பிராணிகளை தாக்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், வன விலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
















