தில் ராஜூ தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த லக்கி பாஸ்கர் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மீனாட்சி சவுத்ரியின் மார்க்கெட் வெகுவாக உயர்ந்துள்ளது.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளை தாண்டிப் பாலிவுட் சினிமாவில் நடிகை மீனாட்சி சவுத்ரி களமிறங்க உள்ளார்.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் கதாநாயகியாக அவர் நடிக்க உள்ளார்.
இதில் கதாநாயகனாகப் பிரபல பாலிவுட் ஆக்சன் நாயகன் டைகர் ஷெராப் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
















