தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இளைஞர்கள் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொன்னம்பட்டி பகுதியை சேர்ந்த சுனில்குமார், முருகன் அகியோர் நேற்று முன்தினம் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டி, பாலக்கோடு காவல் நிலையம் மற்றும் தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு உறவினக்ள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















