கோலாகலமாகத் தொடங்கிய ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை முதல் லீக் போட்டியில் சிலி அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
14-வது ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரானது சென்னை மற்றும் மதுரையில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.
சென்னையில் பிற்பகல் 1.15 மணிக்குத் தொடங்கிய போட்டியில் அர்ஜெண்டினா – ஜப்பான் அணிகளும், பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்து – சீனா அணிகளும் மோதின.
இதில் எதிர் அணிகளை வீழ்த்தி அர்ஜெண்டினா, நியூஸிலாந்து அணிகள் வெற்றி பெற்றன. இதேபோல, முதல் லீக் போட்டியில் சிலி அணியை எதிர்கொண்ட இந்தியா, 7 – 0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ரோசன் குஜூர், டில் ராஜ் சிங் ஆகியோர் தலா இரண்டு கோல்களை அடித்தனர்.
















