கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை இந்திய விமானப் படை விமானம் கொண்டு சேர்த்துள்ளது.
சி130 ரக விமானம், மக்களுக்குத் தேவையான அடிப்படை உணவு உள்ளிட்ட பொருள்களைக் கொழும்புவின் பண்டரநாயக்கே சர்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டு சேர்த்துள்ளது.
இதையடுத்து இலங்கை விமானப் படை அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள், நிவாரணப் பொருள்களைப் பெற்றுக் கொண்டனர்.
மொத்தம் 27 டன் நிவாரணப்பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
















