நிற்பவர்களுக்கு ஒரு போதும் நாற்காலி கிடைக்காது என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், இங்கே நிற்கும் மக்களுக்கு நாற்காலியின் மதிப்பு தெரியாது என்றும், மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள், ஆனால் இவர்கள் நிற்கிறார்கள் என்றும், அவர்களுக்கு ஒருபோதும் நாற்காலி கிடைக்காது எனவும் குறிப்பிட்டார்.
கர்நாடக காங்கிரசில் தலைமை பதவிகள் மற்றும் வாரிசுரிமை தொடர்பாக நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் இந்தக் கருத்து கூறியுள்ளார்.
















