திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மேம்பால பணிக்குக் குடகனாற்று தண்ணீர் பயன்படுத்தப்படுவதால், கட்டுமான பணி தரமற்ற முறையில் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணியானது, தனியார் நிறுவனம் மூலம் நடந்து வருகிறது.
மேம்பால பணிகளை மேற்கொள்ளக் குடகனாற்று தண்ணீரை நிறுவனம் முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது.
ஏற்கனவே, தொழிற்சாலை கழிவுகளால் குடகனாற்று தண்ணீர் மாசடைந்துள்ள நிலையில், இதனை பயன்படுத்துவதால் கட்டுமான பணி தரமற்ற முறையில் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பணியின்போது தயாரிக்கப்படும் சிமெண்ட் ஸ்லாப்புகள் விரிசல் விட்டுக் காணப்படுவது, மேம்பாலத்தின் உறுதி தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
















