நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கோடியக்கரையில் 25 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கோடியக்கரையில் 25 சென்டி மீட்டர் மழையும், வேதராண்யத்தில் 18 புள்ளி 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நாகைக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினர்.
நாகை மாவட்டத்தில் 340 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களுக்கு அழைத்து வரும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
















