சென்னையை அடுத்த தாம்பரம் அருகே வாகன விபத்துகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து புலனாய்வு காவலரிடம் தொலைபேசியில் கேட்ட நபரை அவர் வசை பாடிய ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம் கடப்பேரி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் ராப்பிடோ ஆப் மூலம் புக் செய்த நெல்சன் என்பரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.
அப்போது சேலையூரில் எதிரே மதுபோதையில் வந்த இரண்டு பேர் மகேந்திரனின் வாகனத்தின் மீது மோதியதில், நெல்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதில் படுகாயமடைந்த மகேந்திரன் மருத்துவமனையில் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாகப் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுத்துறை எழுத்தரான ஹரி என்பவரிடம், மகேந்திரன் கேட்டுள்ளார்.
அதற்கு ஹரி, மகேந்திரனை மிரட்டும் தொனியில் பேசி வசை பாடியுள்ளார். இதுகுறித்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
















