பயிற்சி மையங்களில் மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்குச் செல்வதை குறைக்கும் வகையில் 11ம் வகுப்பிலேயே போட்டி தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்க மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.
ஜேஇஇ, நீட், க்யூட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்குப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் பயிற்சி மையங்களையே சார்ந்திருக்கின்றனர்.
இதனை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, குழு ஒன்றை அமைத்து, கல்வி முறையில் உள்ள குறைபாடுகள், சீர்திருத்தங்களை ஆராய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் 11ம் வகுப்பிலேயே மாணவர்களுக்கு 2 முதல் 3 நேரம் போட்டித் தேர்வுக்கான பயிற்சியை அளிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து, ஆரோக்கியமான கற்றல் சூழல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















