சீனா – வியட்நாம் எல்லைப் பகுதியில் 500 ரோபோக்களை ரோந்து பணியில் ஈடுபடுத்த சீன ராணுவம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்துக்கு இணையாகச் சீன ராணுவத்தின் பலம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. சீன ராணுவத்தில் ஏற்கெனவே ரோபோ நாய்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அடுத்த கட்டமாக ரோபோ வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இது தொடர்பாகச் சீனாவின் யுபி டெக் ரோபோடிக்ஸ் நிறுவனத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே அண்மையில் ரூ.330 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி யுபி டெக் ரோபோடிக்ஸ் சார்பில் இந்த ஆண்டு இறுதிக்குள் மனித வடிவிலான 500 ரோபோக்கள் சீன ராணுவத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன. இவற்றை வியட்நாம் எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்த சீன ராணுவம் திட்டமிட்டுள்ளது.
















