லண்டனில் நடைபெறவிருந்த இந்தியா – பாகிஸ்தான் உறவு தொடர்பான விவாதம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தியா சார்பில் பங்கேற்கவிருந்தவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளளனர். என்ன நடந்தது? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி உலகம் முழுவதும் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து பல்வேறு விவாதங்களை நடத்தி வருகிறது. அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ஆளுமைகள் இதில் பங்கேற்று தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வந்துள்ளனர்.
இந்த சூழலில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவு குறித்த விவாதம் ஒன்றை அந்த சொசைட்டி ஒருங்கிணைத்ததது. நவம்பர் 27ம் தேதி லண்டனில் விவாத நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் பாகிஸ்தான் தரப்பை சேர்ந்த பேச்சாளர்கள் பின்வாங்கியதால் இந்த விவாத நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
அச்சம் காரணமாக பாகிஸ்தான் தரப்பினர் பங்கேற்காததால்தான் நிகழ்ச்சி ரத்தானது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இதனை பாகிஸ்தான் தரப்பு ஏற்கவில்லை. இந்தியா சார்பில் பேசவிருந்தவர்கள் பின்வாங்கியதால்தான், விவாதம் நிறுத்தப்பட்டதாகவும், எனவே தங்களுக்குதான் வெற்றி கிடைத்துள்ளதாகவும் பாகிஸ்தான் தம்பட்டம் அடிக்க தொடங்கியது.
ஆனால், பாகிஸ்தானின் இந்த அனைத்து வாதங்களையும் இந்திய தரப்பினர் தக்க ஆதாரங்களுடன் தற்போது பொய்யாக்கியுள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள மூத்த வழக்கறிஞர் ஜே.சாய் தீபக், விவாதத்தில் பங்கேற்க ஜூலை 7ம் தேதியே தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஜூலை 30ம் தேதி தான் பங்கேற்க உள்ளது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது அணி சார்பில் மேலும் இருவரும் பேச இருந்தாகவும் அவர் கூறியுள்ளார். விவாதம் தொடங்குவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்பு ஆக்ஸ்போர்டு யூனியன் தங்களை அழைத்து, பாகிஸ்தான் தரப்பினர் இதுவரை லண்டன் வந்து சேரவில்லை என்பதை தெரிவித்ததாக வழக்கறிஞர் சாய் தீபக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பாகிஸ்தான் அணியினர் முன்பே லண்டன் வந்துவிட்டதாகத் தெரிவிக்கும் அவர், விவாதத்தில் பங்கேற்க அஞ்சிக் கடைசி நேரத்தில் அவர்கள் பின்வாங்கியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் அணியில் பேசவிருப்பவர்கள் லண்டனில் தலைமறைவாக இருப்பதை விட்டுவிட்டு, தைரியமாகத் தங்களுடன் விவாதம் நடத்த வேண்டும் எனவும் சாய் தீபக் அறைகூவல் விடுத்தார். இந்த விவகாரத்தில் ஆக்ஸ்போர்டு யூனியனின் செயல்பாட்டிற்கும் கண்டனம் தெரிவித்த அவர், அந்த அமைப்பு பாகிஸ்தானுக்கு ஊதுகுழலாகச் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிவசேனா துணை தலைவர் பிரியங்கா சதுர்வேதி, பாகிஸ்தானிடம் இருந்து எந்தவொரு சிறப்பான விஷயத்தையும் நாம் எதிர்பார்க்க முடியாது என விமர்சித்துள்ளார். போர் தொடங்குவதற்கு முன்பே, பாகிஸ்தான் அணியினர் போர்களத்தை விட்டுப் புறமுதுகு காட்டி தப்பியோடி விட்டதாக நெட்டிசன்களும் தற்போது கிண்டல் செய்து வருகின்றனர்.
இதனிடையே, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தாங்கள்தான் வெற்றிப்பெற்றோம் என எப்படி பாகிஸ்தான் கூறியதோ, அதேபோல், நடக்காத இந்த விவாதத்திலும் தாங்கள்தான் வென்றதாகப் பாகிஸ்தான் தற்போது பெருமை பேசி வருகிறது.
















