ஜவுளி துறையில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜவுளித்துறையில் ஆராய்ச்சி, மதிப்பீடு, புத்தொழில் உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு, டெக்ஸ் – ராம்ப்ஸ் எனும் திட்டம் சுமார் 305 கோடி ரூபாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2025 முதல் 2031ஆம் நிதியாண்டு வரை நடைமுறையில் இருக்கும் இந்தத் திட்டத்திற்கான நிதியை, மத்திய ஜவுளி அமைச்சகம் வழங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ஜவுளி மற்றும் ஆடை துறையை எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் தயார்படுத்துவதற்காக இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
















