தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாகச் சுமார் இரண்டாயிரத்து 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
டிட்வா புயல் காரணமாகப் பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பெரியகோட்டை, சொக்கனாவூர், புளியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் இரண்டாயிரத்து 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், வயல்களில் தண்ணீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது.
இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் முறையாகத் தூர்வாராததே இதற்குக் காரணம் என்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















