கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழகத்தின் அரிய கட்டடக்கலையுடன் மூன்று நடுகற்கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
படப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பட்டகானூர் கிராமத்தில் மூன்று நடுகற்கோயில் பராமரிப்பு இன்றி இருந்து வந்தது. இதைக்கண்ட கிராம நிர்வாக அலுவலர் கோயிலின் தொன்மையை உணர்ந்து தொல்லியல் குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற தொல்லியல் துறையினர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நடுகற்கோயில்கள் சுமார் 350 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் தொல்லியல் குழுவினர் தெரிவித்தனர்.
















