வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த, இனி மொபைல் போன்களில் ஆக்டிவ் சிம் கார்டு இருப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற செய்திப் பரிமாற்ற செயலிகளை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயலிகளை பயன்படுத்த ஒருமுறை OTP மூலம் லாகின் செய்துவிட்டால், பிறகு சிம் கார்டை அகற்றினாலும், மாற்றினாலும் செயலிகள் தொடர்ந்து வேலை செய்யும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
சிம் கார்டு இந்தியாவில் இல்லாவிட்டாலும், முடக்கப்பட்டாலும் செயலிகள் இயங்குவதால் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன.
இதனை சரிசெய்யும் விதமாக செயலிகளை பயன்படுத்த, இனி மொபைல் ஃபோன்களில் ஆக்டிவ் சிம் கார்டு இருப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய விதியின் படி பயனரின் சாதனத்தில் உள்ள சிம் கார்டு தொடர்ச்சியாக செயலில் இணைக்கப்பட்டிருப்பதை 90 நாட்களுக்குள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வெப் பிரவுசரில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் போது 6 மணி நேரத்திற்கு ஒருமுறை லாக் அவுட் ஆகும் வகையில் இந்த புதிய விதி அமலுக்கு வரவுள்ளது.
















