ஆந்திர மாநிலம், துவாரகா திருமலையில் மலைப்பாம்பை கழுத்தில் அணிந்து மக்களை பயமுறுத்திய போதை நபரின் வீடியோ வைரலாகி வருகிறது.
துவாரகா திருமலையில் உள்ள ஒரு குளத்தில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக வலைவீசியுள்ளனர். அவர்களது வலையில் சிக்கிய பெரிய மலைப்பாம்பை மீனவர்கள் கரையில் வீசியுள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த போதை நபர், மலைப்பாம்பை தடியால் தாக்கிக் கொன்றுள்ளார். பின்னர் அதனை தனது கழுத்தில் போட்டு கடைவீதிகளில் வலம் வந்து மக்களை அச்சுறுத்தினார்.
















